Latest Poems

அந்த நாள் வராதோ??

உற்சாகமூட்டும் காலைப்
பொழுதினிலே
வீசும் தென்றல் காற்றினிலே
பச்சைப் பசுமையான
வயலினிலே,
குட்டிக் கவிதை கவிதை 22, September 2007 More

நீங்களும் இரவும் நாங்களும்

ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும் வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.
புரட்சி கவிதை நிலா 22, September 2007 More

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்
ஒரு மாலைநேர
ஈரக்காற்றின் உவர்ப்போடு
அழுததாய் ஞாபகம்.

காதல் கவிதை சாந்தி 21, September 2007 More

சாதிவெறி இன்னும் தீரவில்லை

சாதிவெறி இன்னும்
சத்தியமாய் தீரவில்லை
எங்கள் தமிழ் போராட்டமும்
அவ்வெறியை தீர்க்கவில்லை
பலநூறு மைல்கள்
பறந்து வந்தும் ஐயையோ
பார்கின்றோமே
சாதியது இங்குமல்லோ
புரட்சி கவிதை சிவபாலு 21, September 2007 More

வாழ்க்கையின் வெறுமை

என் இளமைப்புத்தகத்தின்
இரவுப்பக்கங்கள்
வெறுமையாய் கிடக்கின்றன
இன்னும் எழுதப்படாத
ஓர் கவிதையை எண்ணி....
ஏனையவை ஈழநேசன் 19, September 2007 More

கவனம் !!

நாலெழுத்து படித்து விட்டால்
நானே ஊருக்கு நாட்டாமை என்பான்

கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால்
நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான்
அவன் பாட்டன் - கோவணத்துடன்
திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான்
மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்!
ஏனையவை வர்ணன் 19, September 2007 More

தமிழைத் தேடி

புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நடப்பு கவிதை கவிதை 19, September 2007 More

நட்பு உன் வழிகாட்டி

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி

இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு

நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
ஏனையவை ஈழநிலா 19, September 2007 More

பதில் சொல்...

காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால்
என்ன இது புது புதிர் போடுகின்றாய்...
வேணும் என்று நினைத்த உன் மனம்
வேணாம் என்று நினைத்த உன் மனம்
நாம் இனி நண்பர்களாய் இருப்போம்
ஏனையவை SLgirl 19, September 2007 More

எங்கோ இருந்து கொண்டு

என்னதான் செய்கிறாய்
எங்கோ இருந்து கொண்டு...
மொழி தெரியா
குழந்தை போல
ஒரே குழப்பம்.
ஏனையவை ஹேமா 18, September 2007 More