காதல் கவிதை

அன்பெனும் விலங்கு

18, October 2017
Views 560

எதிர்பாராமல் எதிர்ப்பட்ட
பெயர் தெரியாத மிருகம்
முதன் முதலில்
என்னைப் பார்த்ததும்
மான்குட்டியைப் போல் மருண்டது

பிறகு நாய்க்குட்டியைப் போல்
கொஞ்ச காலம் உறவாடியது
பூனையைப் போல் பின்பு அது
பிறாண்ட ஆரம்பித்தது

நான் விலகத் தொடங்கியதும்
புலியைப் போல் துரத்த ஆரம்பித்த அது
டிராகனைப் போல் நெருப்பைக் கக்கி
என்னைக் கொன்று மென்று தின்று
செரித்துக்கொண்டிருக்கும்போது

முதன் முதலாக அந்த
மிருகத்தை ருசி பார்த்தேன்
அதன் சுவை எனக்குப் பிடித்திருந்தது.