நடப்பு கவிதை

எமக்குத் தொழில்

01, August 2017
Views 899

ஒரு கடனைப்போல்தான்
இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது
ஒரு கட்டாயத்தின் பேரில் தான்
இக்கவிதைக்கு தலைப்பு
இடப்பட்டிருக்கிறது
இக்கவிதை உணர்த்தும் சேதி
வேண்டுமென்றே ஒளித்து
வைக்கப்பட்டிருக்கிறது
இக்கவிதை பேசப்பட
வேண்டுமென்பதற்காக
தன் இயல்பான மொழி மறந்து
வேறுமொழி பேச
வைக்கப்பட்டிருக்கிறது
இக்கவிதை சுட்டும் இலக்கு
உங்களைக் குழப்ப வேண்டும்
என்பதற்காகவே
சுழற்றி வைக்கப்பட்டிருக்கிறது
கலவரப்பட்ட வாசகன் முகம் பார்த்து
ஒரு கடவுளைப்போல்
சிரித்துக்கொண்டிருக்கிறான்
கவிதை எழுதியவன்