காதல் கவிதை

காதலிக்க வைத்துவிடு.....!

03, March 2017
Views 1144

என் இதய ஊஞ்சலை
ஆடவைத்துவிட்டு அதில்
ஏறமாட்டேன் என்று ஏன்
அடம்பிடிகிறாய்........?
எத்தனை காலம் தான்
வெறும் ஊஞ்சலாடும்.....?

சுற்றும் பம்பரத்துக்கு கூட
ஓய்வுண்டு என் இதயத்தை
பம்பரமாய் சுற்றிவிட்டு
பார்த்து கொண்டே இருகிறாய்........!

என் இதய வீட்டுக்கு
எப்போது குடிவர போகிறாய்....?
எண்ணத்தால் தினமும் கோலம்
வண்ண வண்ணமாய் போடுகிறேன்
தினமும் என் ஏக்க மூச்சு.....
அழித்து கொண்டே போகிறது......!!!

கோலங்கள் மாறுகின்றன
உன் கோலம் ஏன் மாறவில்லை
இறைவா இவன் காணும்......
கனவை நிஜமாக்கி என்னை
காதலிக்க வைத்துவிடு............!!