Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

ஏனையவை

நேசம் தாராய்

27, April 2011
Views 7968

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்து
புறப்பட்டதொரு புயலாய்
உன் தேசத்தில்
கரையிறங்கினேன் நான்

மனிதர்களின் வக்கிரங்களும்
உக்கிரங்களும் மட்டுமே
கண்டிருந்தேன்
நீண்டதோர் வழித்தடம் நெடுகிலும்..

வாழ்க்கையில்
எல்லா வாசல்களையும்
மூடிக்கொண்ட மனிதர்களும்
இருப்பதையெல்லாம் பறித்துக் கொண்ட
நண்பர்களும் தான் 
என் அனுபவங்கள்.

செல்லமாய் வளர்ந்து
திசை தவறிப்போன
ஆட்டுக்குட்டியொன்றாய்..
நான் தனித்து விடப்பட்டேன். 
விலகிப் போன நினைவுகள் கோடியாய்..

விலக்கப்பட்ட துயரங்கள்
அதைவிட ஏராளமாய்..
எனக்குள் புதைந்து கிடந்தன

துடிதுடித்துச் சாகக் காத்திருந்த
எளியதோர் ஆன்மாவாய்
நான் காத்திருந்தேன்
எதிர்காலம் நோக்கி..

எங்கிருந்தோ நீ வந்தாய்
எந்தன் நேசத்தைப் பகிர்ந்து கொண்டாய்
சோகங்கள் போக்க ஆறுதல் தந்தாய்

அத்தி பூத்தது போலென்றாலும் 
உன் ஆறுதல் வார்த்தைகள்
அள்ளித்தந்தது நிம்மதி
தெளிந்தது நொந்து போன மனம்

தென்றலில் தாலாட்டும்
சின்னஞ்சிறு செடியாய்
சிற்றிலைகள் அசைந்தாடும்
வண்ண மலர்க் கொடியாய்
உன் நேசம் 
நெஞ்சை நிறைத்தது

என்றைக்கும் உன் நேசம் தா
சோகங்களே எனக்கிருக்காது
சகோதர பாசம் தந்தால்
துயரமே கடலாய் மூழ்கடித்தாலும்
உலகமோ எனக்கு வெறுக்காது...