ஏனையவை

கொஞ்சி விளையாடும் கோவம்.....

03, March 2018
Views 396

மனித மனங்களிலே
எத்தனை எத்தனை உணா்வுகள்
அன்பு கொள்கிறது
ஆசை கொள்கிறது
இரக்கம் கொள்கிறது
ஆா்ப்பரிக்கும் அலைகடலாய்
கோவமும் கொஞ்சி விளையாடிடுமே.

கணவன் மனைவி மீதும்
மனைவி கணவன் மீதும்
பெற்றவா்கள் பிள்ளைகள் மீதும்
பிள்ளைகள் பெற்றவா்கள் மீதும்
என கொஞ்சி விளையாடிடுமே கோவம்.

கண நேரமதில் கொஞ்சி
விளையாடும் கோவமது
வார்த்தைகளை வன்முறையாய்
வகை தொகையின்றி உதிர்த்துவிட
மெளனமும் பொறுமையும் தம்
தனித்துவத்தை இழந்து நிற்க
கொஞ்சி விளையாடிடுமே கோவம்...

அன்பு எனும் மந்திரச்சாவி
மனித மனங்களிலே
தொலை தூரம் தொலைந்து நிற்க
நாளும் பொழுதும்
கொஞ்சி விளையாடி நிற்கிறது கோவம்...