நடப்பு கவிதை

அணைத்திரு பின் அழதே..!

03, March 2018
Views 388

கத்த, கத்த
நீ ஏசுவதாகவே
ஆத்திரப்பட்டோம்
வாய் நிரம்ப உணவோடு
வந்து தான் கத்தினாய்
என்பது - நீ
இல்லாத போது...
தெரிந்தும்
என்ன பயன்...

இறகுகள் ஓய்ந்து
நீ கிடந்த போது
உன்னை பார்க்க
பறந்து வராத நான்
உலகத்தின்
உச்சாணி
கொப்பொன்றில்..
முட்டையிட்டும்
என்ன பயன்...