ஏனையவை

மனதிற்கிட்டகட்டளை....

18, February 2018
Views 190

அலை பாயும் மனதினிலே
ஆா்ப்பரிக்கும் அலைகடல் போல்
பற்பல எண்ணங்களும்
பற்பல உணா்வுகளும்
மனித மனங்களிலே.

பொறாமை கொள்கிறது
ஆசை  கொள்கிறது
பேராசை கொள்கிறது
கோவம் கொள்கிறது
அன்பு இரக்கம் கொள்கிறது
மனம் எனும் மந்திரசாவியிது

இந்த மனம் எனும் மந்திர சாவிக்கு
ஒவ்வொரு நொடியும் பல விதமாய்
நல்லதும் கெட்டதுமாய் நாமிங்கு
கட்டளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறோம்
கட்டளையிடும் ஏஜமானா்களாக நாம் இங்கு...