ஏனையவை

அவள் வரவேண்டாம்...

Inthiran
18, February 2018
Views 493

அண்ணனின் (முருகன் ) கோவிலிலே
தம்பிக்குப் (ஐயப்பன்) பெரும் பூசை
சக உதரம் அருகிருந்து
சத்தமின்றி வணங்கியது
என் முகத்த்தைக் கண்டதுமே
அப்படியே நழுவியது
அண்ணனுக்கும் தம்பிக்கும் 
அரோகரா சத்தத்தால் - யாரும்
என்னதான் கண்டனரோ
எடுத்தெறிந்து பேசினரோ
சோதரியின் முகத்தில் தான்
ஈ கூட ஆடவில்லை - அட
ஏன் இந்த வேடங்கள்
எதற்கிந்த நாடகங்கள்
சீரற்ற காலநிலை - அதில்
சிரிப்பும் வரவில்லை
எங்கே நான் போய் விட்டால்
அழுதபடி வருவாளோ?
ஆகா இனி நல்லதென்று
பாகாகச் சிரிப்பாளோ?
சீண்டிச் சிரித்தவர்கள்
வேண்டித்தான் மறப்பாரோ?
வேண்டாமே அழுவதற்கு
அப்பொழுதும் வர வேண்டாம்
வேண்டும் போது இல்லாமல்
வேதனைகள் செய்தவர்கள்
மீண்டும் வர வேண்டாம் - தூர
எங்கேனும் இருக்கட்டும் - எனக்கு
என்னதான் நடந்தாலும் – அவர்கள்
அங்கேயே இருக்கட்டும்!