காதல் கவிதை

கனவு

18, February 2018
Views 1096

இரை தேடும் பறவை - நான்
இசை கேட்டு தடுமாறியதேன்...
உணர்வோடு அல்ல - நான்
உயிரோடும் கலந்தேன் உன்னோடு.
மலரோடு உரசும் காற்றாய்
மனதோடு மனதாற வேண்டும்
உன் மடி மீது தலைசாய்ந்து
துயில் கொள்ள வேண்டும்.

புரியாத புதிர்தான்
உனைக்காண புருவங்கள்
அசைபோடும் வேளை.
அறியாத பருவம்தான்
அன்பே ஆசைகள்
வந்தேறியபோது.

அத்தனையும்
பொய்தான் நான்
கண் விழித்த போது.