நடப்பு கவிதை

அந்நாளே திருநாள்....

18, February 2018
Views 1201

குடும்ப அரசியல்
ஒழிந்திட வேண்டும்
நாட்டு மக்கள்
நலம் பெற வேண்டும்

சீதனக் கொடுமை
அகன்றிட வேண்டும்
கன்னியா் வாழ்வது
செழித்திட வேண்டும்

பெண்ணடிமைத்தனம்
தகா்ந்திட வேண்டும்
ஆண் ஆதிக்கம்
அழிந்திட வேண்டும்

சாதி வெறி இல்லாது
நிலை பெற வேண்டும்
சமத்துவம் எங்கணும்
மலா்ந்திட வேண்டும்

இத்தனையும் கேட்போருக்கு
கிடைத்திடும் நாளொன்று
உண்டாயின் எமக்கு வாழ்வில்
அந்நாளே திருநாள்....