ஏனையவை

தனிமையோடு பேசுகிறேன்......

12, February 2018
Views 83

கூட்டுக் குடும்பங்களாய்
வாழ்ந்த நாம் இன்று
கல்லெறிபட்ட குருவிகளாய்
எட்டுத்திக்கும் சிதறி
தனிமை எனும் சிறைக்குள்
அகப்பட்டு வாழ்கின்றோம்...

வாழ்வின் வலிகளை
மனதின் வலிகளை
பகிர்ந்து கொள்வதற்கும்
புரிந்து கொள்வதற்கும்
அருகில் யாருமின்றி
நாளும் பொழுதுமாய்
தனிமையோடு நகர்கிறது
நம் வாழ்வு...

கடுகதியாய் நகரும் வாழ்வதுவில்
மனதின் பாரங்களை
பகிர்ந்து கொள்வதற்கும்
புரிந்து கொள்வதற்கும்
எனக்குள் நானே பேசுகிறேன்
தனிமையாய் பேசுகிறேன்
தனிமையோடு பேசுகிறேன்...