புரட்சி கவிதை

அறிவுகெட்ட வாக்காளன்...

12, February 2018
Views 68

ஜாதிப் பிரச்சினை
ஜாதிக்காரன் போராடுகிறான்..!
மதப் பிரச்சினை
மதத்துக்காரன் கூடுகிறான்..!
இனப் பிரச்சினை..
இனத்துக்காரன் குரல் கொடுக்கிறான்
தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் பிரச்சினை
சங்கங்கள் கூடி கொடிப் பிடிக்கிறது.
அரசியல் பிரச்சினை
அரசியல்வாதிகள் மறியல் செய்கிறார்கள்..!

பேருந்து கட்டணம் உயர்வு,
கல்வி கட்டணம் உயர்வு
பஞ்சம், பசி, பட்டினி
விலைவாசி உயர்வு..
இயற்கை பேரழிவு.. என
தொடரும் துன்பத்தில்

தலைவர்களின் கண்டன
அறிக்கைகள் மட்டுமே
ஆதரவு குரல் என நம்பி
காத்திருக்கிறான்.. அறிவுகெட்ட
வாக்காளன்- அடுத்த தேர்தலில்
வாக்குகளை விற்க...!