நடப்பு கவிதை

வாசிப்பு எம் மொழி காப்பு...

07, February 2018
Views 193

வாசிப்பதே மனிதனின் முதல் வளர்ச்சி
வாசிப்பதே மனிதனின் உயிர் மூச்சு
வாசிப்பதே மனிதனின் இதயத்துடிப்பு
வாசிப்பதே சிறந்த வழிகாட்டி

வாசிப்பதால் மனிதன் உலகம் முழுவதும்
உலாவுகின்றான்
வாசிப்பதால் மனிதன் ஞானியாகின்றான்
வாசிப்பதால் மனிதன் புனிதனாகின்றான்
வாசிப்பதால் மனிதன் உயிரை நேசிக்கின்றான்
வாசிப்பதால் மனிதன் மனிதனாகின்றான்

புத்தகத்தை நண்பனாக தேர்ந்தெடு
புத்தகம் உன்னை வித்தகனாக்கும்
பித்தனாகாமல் எம்மை சித்தனாக்கும்
தத்துவங்கள் சித்தமாகும்
நித்தமும் வாசிக்க நித்தியம் பூக்கும்
சத்தியம் சிந்தையில் ஊறும்

மர்ம முடிச்சுகளுக்கு விடுதலை தரவல்லது
வாசிப்பை சுவாசி
வாசிப்பை நேசி
மொத்தத்தில் வாசிப்பதே உயர்வைத்தரும்...