புரட்சி கவிதை

வாழ்க ஜனநாயகம்..!

07, February 2018
Views 329

பார்வை இல்லாதவன் கையில்
பிக்காசா ஓவியம்..!
கோழையின் கையில்
வீச்சறுவா
குழந்தையின் கையில்
பொற்காசுகள்..!
குரங்குகளின் கையில்
பூமாலை..!
ஆளத்தெரியாதான் கையில்
ஆட்சி..!
வலிமை தெரியாதவன் கையில்
வாக்குரிமை..!
வாழ்க ஜனநாயகம்..!