காதல் கவிதை

யுத்தம் செய்யும் கண்கள்...

07, February 2018
Views 507

ஓர விழிப்பார்வையால்
மெளன மொழி பேசி - என்
இதய வீணையில்
சுக ராகம் இசைக்கிறாய்

தென்றல் வருடும்
அதே வேளையில்

அதிர்வலைகள் தாங்காத
தந்திக் கம்பியில் - உன்
மொத்தப் பார்வையால்
யுத்த முரசு கொட்டிச்
செல்கிறாய்..!

கத்தும் கடலோசையை
மனசுக்குள் தந்துவிட்டு
சாந்தமாய் நீயும்
கடந்து போகிறாய்

கஜினி முகமதுவின்
படையெடுப்பாய்
உன் யுத்த கண்களுக்கு
தோற்றுப் போகும் நான்
கரை தீண்டும்
அலை அலையாய்
மீண்டும் மீண்டும்
பின் தொடர்கிறேன்..!

வீழ்வது நானானாலும்
வெல்வது காதலாகட்டும்..!