காதல் கவிதை

உண்மைக்காதல்

13, December 2017
Views 666

கண்களின் சந்திப்பினால்
உள்ளங்கள் இணைந்து
உயிருக்குள் உறவாகும்
உணர்வே காதல்
பணத்தால் வருவதுமல்ல
ஜாதி மத பேதமென பாகுபாடுமல்ல
சுகங்களை மட்டுமன்றி
சோகங்களையும் சுமந்து வரும்
ஒரு உயிருள்ள ஓவியமே காதல்
காலம் நேரமெல்லாம் அறியாது
பார்த்தவுடனே வரும்
ஒரு உன்னத உணர்வே காதல்
வாலிப வயதின் வற்றாத
இன்பக்கடலே காதல்
ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏழேழு ஜென்மங்கள் வாழ்வதற்கே........