புரட்சி கவிதை

தெய்வம் நின்று கொல்லும்

Inthiran
11, December 2017
Views 596

அரபு நாட்டின் தண்டனையில்
அநீதியே அதிகம் என்றெண்ணித்
தரவுகளைச் சேகரித்தேன்
தர்மத்தைப் போதித்தேன்

இல்லை இல்லை அதையும் விட
நாட்டில் அதிகமாக வேண்டும் என்று
அமைதியின்றி அழுதழுது இன்று
ஆற்றொணாமல் கேட்கின்றேன்

செய்ய நினைப்பதென்ன அப்பாவிகள்
உய்ய வழி வேண்டும் அதற்குப்
பையத் தண்டனைகள் இனி மெல்ல
மெல்லப் பகிரங்கமாக வேண்டும்

தெய்வம் நின்று கொல்லுமாம் 
கொல்லட்டும் என்றாலும் கண்முன்னே
கோரப்பசி கொண்டோரைக் கூட்டி வந்து
கொலுவிருக்க வைக்கலாமோ