ஏனையவை

வீட்டுக் கணவர்கள்......!

06, December 2017
Views 195

வீட்டுக்கணவர்கள்
வெளிநாட்டில்
இராப் பகலாய்
ஓடி ஓடி உழைக்கணும்
ஓடாய் தேய்ந்து போகினம்

நிந்மதியற்ற வாழ்வென
தமக்குள்ளே புழுங்கிவிட்டு
மனைவி மக்கள் உறவுகள்
நலன் காக்க நாளும் பொழுதும்
நாயாய் அலையினம்

எடுக்கும் பணத்துட்டில்
குடும்ப செலவுகள்
மாதமொரு திண்டாட்டம்
இல்ல சீ கொண்டாட்டம்
ஊரில் இருக்கும் உறவுகளின்
மணி அழைப்பு என பட்டியல்
நீண்டு செல்ல

எல்லா சுமைகளையும்
சுமைதாங்கிபோல் சுகமாய் ஏற்று
வீறுநடை போடுகிறார்கள் வெளிநாட்டில்
வீட்டுக் கனவான்கள் இல்ல கணவர்கள்.