குட்டிக் கவிதை

நீ ஒருத்தி

05, December 2017
Views 298

எனக்குத்
தெரிந்தவர்களுக்குள்
நீ ஒருத்தியாக
இருக்க முடியாது

ஏனெனில் அவர்கள்
கண்பார்த்து
பேசுபவர்கள்

ஆதலால்
என்னைத்
தொலைத்தவர்களுக்குள்தான்
நீ மறைந்திருக்க வேண்டும்

அவர்கள்தான்
என்னைத் தவறாக
புரிந்துகொண்டு
குயில்வேசம் போடுபவர்கள்