காதல் கவிதை

தனிமையின் கொடுமை!!!

Inthiran
05, December 2017
Views 643

நள்ளிரவு வேளையிலே
நல்ல வெள்ளி நிலவெறிக்கத்
தள்ளி வைத்துப் போனவனே
தவிக்குதடா தாமரைப்பூ

அள்ளி வைத்த ஆசைகளும்
கிள்ளி வைத்த நேசங்களும்
பள்ளியிலே சொல்லவில்லை
பார்த்தவர்கள் கூறவில்லை

எள்ளளவும் நம்பவில்லை
எடுத்தெறிந்து பேசவில்லை
கொள்ளிவைக்கும் நேரமென்று
கொண்டவனும் சொல்லவில்லை

எள்ளி நகைக்குதடா எந்தன்
எதிர் வீட்டு நாய்களெல்லாம்
பல்லுப் படாமல் மெல்ல மெல்லப்
பல கதைகள் சொல்லுதடா 

கல்லும் கனியாக என்னைக்
காதலித்துப் போனவனே
சொல்ல வார்த்தை இல்லையடா
 சொர்க்கமும் தனிமையிலே நரகமடா