ஏனையவை

இந்திரவில்...!

Inthiran
02, December 2017
Views 259

திங்களவள் தாயோ 
கதிரவனின் சேயோ
வானவில் உன் பெயரோ
வண்ண வடிவழகோ
ஆயுளற்ற அழகோ
என்ன என்ன இனிப்போ
எண்ணத்திலே சிறப்போ
கண்ணியமாய் வளைவோ
கண்களையும் கருத்தினையும்
கவருகின்ற விளக்கோ
சப்த வர்ண மலரோ இல்லைச்
சாமி தந்த வரமோ
ஆகாயப் பந்தலிலே
ஆடுகின்ற பழக்குலையோ
கவிதை பெருக்கெடுக்கவென்றே
கண்கொடுக்கும் ஊற்றோ
கொஞ்ச நேரம் வந்து நின்று
கொஞ்சிப் பேசும் பெண்ணோ
இந்திரவில் என்பதுதான்
உனது மறு பெயரோ