காதல் கவிதை

ஆற்றல் கற்றேன்

சுஜாதா
14, November 2017
Views 423

கறுப்பு மச்சம் கண்டேன் உன்
சிவப்பு உதட்டின் மேலே
கொழுப்புக் கொஞ்சங் கண்டேன் உன்
குத்தல் கதையின் முன்னே

இனிப்புக் கொஞ்சங் கண்டேன் உன்
இனிக்கும் செய்கை தனிலே
கடுப்புக் கொஞ்சங் கண்டேன் உன்
கள்ளப் பார்வை கண்டு

தடுக்கும் ஆற்றல் கற்றேன் உன்
தவறு செய்யும் பண்பில்
மிடுக்கும் கொஞ்சம் கொண்டேன் உன்
முரட்டுப் பேச்சைக் கேட்டு

விரட்டும் ஆற்றல் கொண்டேன் உன்
வேகப் பயிற்சி முன்னே
அணைக்கும் ஆற்றல் கற்றேன் உன்
வெகுளித் தனத்தைக் கண்டு