காதல் கவிதை

என்னோடு நீயாகு

Inthiran
14, November 2017
Views 450

பூப்போன்ற கண்ணே
என்னுடைய பெண்ணே ஆ
மாப்போட்ட பின்னே தீ
சுடுமா என்னே இது

மண்ணோடு நீர் போலே
என்னோடு நீயாகக் 
கண்ணோடு மணியாக
உன்னோடு நானாக

விண்ணோடு மதி போலே
என்னோடு நீயாக
பண்ணோடு இசையாக
உன்னோடு நானாக

தன்னோடு வளியாக
உன்னோடு நானாவேன்
பெண்ணே நீ எப்போதும் 
என்னோடு நீயாகு