குட்டிக் கவிதை

அன்னையைத் தொழுதே அகிலத்தில் உயர்வோம்...

அருட்கவி
13, November 2017
Views 289

அன்னையில் மேலாம் ஆண்டவன் உண்டோ?
முன்னே கண்டிடும் முழுமுதல் அவளே!
கண்ணைத் தூங்காது கடுந்தவம் செய்து
உண்ணும் உணவையும் உனக்காய் ஒதுக்கிய
பெண்ணெனும் தெய்வம் பெற்ற தாயே!

அன்னையைத் தொழுவார் அகிலப் பெரியார்
உன்னுடல் சுமந்தவள் உயிரினும் மேலாம்
என்னிடர் ஏகிலும் ஏற்றிடு தாயை
அன்பினைச் சொரிந்து அணைத்திடு அவளையே!

தாயின் பாத தரிசனம் செய்துபார்
சேயுன் வாழ்வு செழிப்பொடு உயருமே!
அயனொடு மாயன் அறியா இறைவனை
நிஜமாய்க் கண்டு நீ நிம்மதி அடைவாயே!