காதல் கவிதை

கணவன் வேண்டும்

சுஜாதா
12, November 2017
Views 385

அந்திப் பொழுதில் என்
அத்தான் அருகில்
கொஞ்சிப் பேசிக்
குலவிட ஆசை

வஞ்சி எந்தன்
எண்ணம் அறிந்தும்
விஞ்சி நின்று
வதைப்பதேனோ

பஞ்சு மெத்தை
தேவையில்லை
கொஞ்ச எனது
அத்தான் போதும்

காசு பணமும்
எனக்கு வேண்டாம்
காலமெல்லாம்
கணவன் வேண்டும்