புரட்சி கவிதை

தலையிடியும் காய்ச்சலும்……

Inthiran
12, October 2017
Views 418

மனிதங்கள் இல்லாத
இடங்களில் எல்லாம்
மரணத்தின் ஓலங்கள்
மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்

இறப்புகளும் இழப்புகளும்
ஆயிரமாய்க் கண்டதனால்
அஞ்சலிக்க எங்களுக்கு
அருகதையும் அதிகமுண்டு

அரசேதான் செய்தாலும்
அகிலம் தண்டித்திருந்தால்
அடடா எங்களினமும்
அகதி என்று ஆகாதே

அநுபவிக்கும் போது மட்டும்
அடுத்தவரின் வலி தெரியும்
தலையிடியும் காய்ச்சலும்
தன் தனக்கு வரப் புரியும்