ஏனையவை

பூங்கா

12, October 2017
Views 274

பூங்கா அது
பூக்களின்
பல்கலைக்கழகம்

அந்தப் பசுமை குஞ்சுகளின்
இதழ்களில் பூவண்ணங்களின்
புன்முறுவல்

பூக்களின் தலைகோதும்
தென்றல்

எல்லாப் பருவத்திலும்
பறவைகள் சங்கமிக்கும்
வேடந்தாங்கள்

யாரோ யாருக்கோ
தினம் தினம்
வகுப்பு நடத்தும்
கிளிகள்

கொஞ்சம்கூட
குரல்வளையை
கடன்தராத
குயில்கள்