குட்டிக் கவிதை

எண்ணுகிறேன்

10, October 2017
Views 587

எல்லாமே மாயம்தான் - இங்கு
எந்நாளும் ஏக்கம்தான்
பொன்னான ஊரதை
இந்நாளில் எண்ணுகையில்

கல்லான பூமிதான் - அங்கு
கனிவான வளம்தான்
அண்ணார்ந்து பார்த்தாலும்
அழகான வானம் தான்

எழிலான பசுமையிலே - அங்கு
இதமாக களை ஆறிடலாம்
கடலோர காற்றினிலே
கனவோடு உறங்கிடலாம்

களைதீர ஆகாரம் - அங்கு
நன்கு அருந்திடலாம்
ஆங்காங்கே நல் பழங்களை
ஆசையோடு சுவையாத்திடலாம்

ஆடு மாடோடும் - அங்கு
அன்பாக பழகிடலாம்
அவையோடும் புல் வெளியெங்கும்
அளவிடலாம் தனியாக

பேருக்குத்தான் வாழ்க்கை - இங்கு
போராடித்தான் வாழ்க்கை
ஊருக்குத்தான் போவோம் - அங்கு
உல்லாசமாய் வாழ்வோம்