நடப்பு கவிதை

விவசாயி...!

Inthiran
10, October 2017
Views 438

விதை நெல்லு வாங்கி வைச்சேன்
விரும்பித்தான் விதைச்க்சு வைச்சேன்
விளையாட்டாய்க்  களையெடுத்தேன்
விளைஞ்ச பின்னே கதிரறுத்தேன்

கரை சேத்து விட்ட -அந்தக்
கதிரவனை மெச்சத்தான்
பொங்கலோ பொங்கலெண்டு
பொங்கி வைச்சேன் தைப் பொங்கல்

அடுத்த விளைச்சலுக்கும்
அவனை நம்பித் தவமிருப்பன்
கலப்பை தொட்டுத்தேர் இழுப்பன்
கால்வாசிக் கடனடைப்பன்

ஊரெல்லாம் வெடிச்சத்தம்
மனசுக்குள்ள மழைச் சத்தம்
அடுத்த விளைச்சலுக்கு -நான்
ஆரிட்டக் கடனெடுப்பன்

நாள் முழுக்க வேலை செஞ்சு
நடைப்பிணமாத் திரிஞ்சாலும்
வளைஞ்சு நிண்ட என்னைப் போல
விளைஞ்சு நிண்ட கதிரைப் பார்க்க …..

பூர்வ சென்மம் நினைவு வரும்
புழுதியிலும் பூ மணக்கும்
ஆர்வக் கோளாறிருக்கும்
பார்வையில தெம்பிருக்கும்

காத்தோட சாஞ்ச பயிர்
கலகலன்னு காஞ்ச பின்னே
சேத்தோட செஞ்ச வேலை
சிரிப்போட சிரிப்பும்வரும்

கார்மேகம் கொட்டி விடக்
கலங்காமல் நாத்து  நடக்
கவலையெல்லாம் பறந்து விடும்
கனவெல்லாம் நனவாகும்

ஏர் பிடிச்ச கையெண்டு
ஊர் முழுக்கச் சொன்னாலும்
நான் பட்ட பாடெல்லாம் -ஒரு
நாய் படுமோ யாரறிவார்

காக்காய்க் கறி சமைச்சேன் 
கருவாடு மென்று தின்றேன்
சோக்கான சோழியன் நான்
சோகமில்லை சுகமுமில்லை