காதல் கவிதை

வருவாய்..!

Inthiran
09, October 2017
Views 487

அகமெங்கும் நிறைந்தாளும்
சுகமான சுமையே
பசை போட்டு இசைந்தாடும்
இசையே என் இசையே

தசையோடு என்பான
தளிர்மேனி வரமே
வசமாக வளைந்தாடி
வருகின்ற காற்றே

திசை மாறிப் போகாத
திருவான திருவே
நினைவாகி நிஜமாகி
நிலைக்கின்ற உறவே

வருங்காலம் வளமாகும்
வளர் காதல் நிலவே
கருங்கூந்தல் கலைந்தாடக்
கை கோர்க்க வருவாய்