காதல் கவிதை

வழி சொல்..!

09, October 2017
Views 536

தூக்கக் கலப்பு
தூங்காமல் விழிப்பு
காரணம்
கனவோடே உன் நினைப்பு

கட்டிலோடு காவியம் பேசி
கனவுகளுக்கு தீனி வார்த்ததில்
காணாமல் போனது தூக்கம்
பலமுறை பலதிசை புரண்டும்
பக்கத்தில் வரவும் அதற்கு நாட்டம் இல்லை

ஏனடி என்னை வாட்டுகிறாய்?
இராத்திரி சூரியனாய் - என்
இரத்தத்தில் உறைந்தவளே - உன்
வெப்பத்தில் வியர்வை கொண்டேன்
உறங்கிட ஏதும் உத்தியுண்டோ…?