நடப்பு கவிதை

ஊமை உணர்வுகள்..!

09, October 2017
Views 438

நிசப்தவெளியில்
நிறைவேறா ஆசைகள்
மாறாத காயங்களுடன்
காணாமல் போன தம் உறவுகளை
எண்ணிக் கலங்கியோராக

மனம் வருடுகின்ற
நினைவுகளோடு
நீண்ட வழிப் பயணமாக
ஊமை உணர்வுகளோடு
உள்ளம் மட்டும் அழுகிறது

யாருமற்று
அழுது தொலைக்கின்ற
தெருவோர மக்களை - இனி
தத்தெடுக்க யார் வருவர்