புரட்சி கவிதை

ஒரு துளியும் கலங்காது நீதி

பிறேம்ஜி
09, October 2017
Views 369

சமுதாயமே குற்றம் செய்பவனை
குற்றத்தின் பிடியில் வைத்திருப்பது
என்ன நியாயம்
சமுதாய குழப்பமா?
நீதீயின் குழப்பமா?
குற்றத்தை தூண்டும் செயல் குழப்பமா ?
இன்று கேட்க வில்லை
இனித்தான் கேட்க வேண்டும்
இதைப்போடும் நானும் நல்லவனில்லை

நீயும் கெட்டவனில்லை நீர்க்குடக் குற்றம்
நீதியின் செயலும் குற்றம்
மனிதனின் செயலில் விளைந்த நீதியையே
இயற்றுபவன் குற்றம் புரியவில்லையா ?

கடுமையான சட்டம் மனித உரிமை
புத்தகத்தில் பூட்டி வைத்த சட்டம்
திறப்பதற்கு பணம் ஏறிய வேண்டும்
பலமாக இருக்கும் சட்டம்

இலகுவாக துறக்கப் படும்
நீதி மண்டி ஈடும் துர்ப்பாக்கிய நிலையிலும்
சட்டம் நீதி சாக்கடையில் வழி வந்த பணம்
பிரியோசனப் படுகிற படுகுழி பணம்
அதுவே உனக்கும் விதைகுழி
சுயநலத்தின் விதி வழி நீதி
விலகாமல் இருக்குமா நீதியின்
திராசு திருடர்கள் கவனம் நீதீயை
பிரதி மாத்தும் இதையமில்லாக் கூட்டம்
சுத்துது கவனம் குற்றத்தின் தண்டனையில்
தப்பிக்கும் சகலரும் 
நுறு  விகிதம் குற்வாளிகள் தான்
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் அல்லவா
சமுதாயப் பிடியில் இருந்து தப்புவது கடினம்
பாமர சமுதாயத்தில் இருந்து தப்புவது கடினம்
சமுதாய பார்வையும் சமூகப் போராளியின்
பொறியிலும் தப்ப முடியுமா ??

முயலும் குற்றத்துக்கு முதுகுக்கு கட்டை முறியும்
குற்றத்தின் பிடியிலும் தப்புவது முயற்சி
முடிந்தால் பாமரர்களின் போராளி இடமிருந்து இருந்து தப்பு
தயக்கம் இல்லாமல் தண்டனை பெறுவாய்
தான் ஆடாவிட்டாலும் நீதியின் மறுபக்க தண்டனை ஆகும்
வழங்கும் குற்றம் துண்டு துணியும்
கூட்டம் பாமரர் கூட்டம்
பாமர சமூகப் போராளிக்கூட்டம்
மண்டி இடாது
ஒரு துளியும் கலங்காது நீதி