ஏனையவை

மாயத் தோற்றங்கள்

Inthiran
19, August 2017
Views 1365

நிறை என்று கருத்துபவை
நிறையல்ல சில நேரம் 
குறையாக ஆகிவிடும் - அந்த
முறைகளையும் அறிக

இரை தேடும் பறவைகளே
இரையாகக் கூடும் - எதிரி
மறைமுகமாய் மனதைக்
கவர்ந்திழுப்பான் கவனம்

வரமென்று நினைப்பவைகள்
சாபங்கள் ஆகிவிடும் - அந்த
வரம் தந்த பெரியவர்க்கோ
இலாபங்கள் ஆகிவிடும்

மாயத்தோற்றங்கள் 
மயக்கும் தான் - சிறிய
காயங்கள் பட்ட பின்னே 
கலவரங்கள் குறையும்