காதல் கவிதை

மருந்தாக ஒருசொட்டு விஷமேதும் தந்திடாரோ..!

சிந்து.எஸ்
13, August 2017
Views 576

நேர்த்தியாய் வாழ்ந்தபோதும்
நெஞ்சம் எல்லாம் நொகுதன்பே
கொஞ்சிப்பேசி வாழ்ந்தோமே
கெஞ்சிக் கெஞ்சி வீழ்ந்தோமே

காவலனாய் கொண்டவர்கள்
கயவன் என்று எண்ணுகையில்
கதி கலங்கி நிற்கிறோமே
காண்ணீரில் கரைகிறோமே

விதியறிந்து செல்கையிலும்
சதியறிந்து வீழ்த்தியவர்
மதியறிய மறந்திட்டோமே

மாங்கல்யம் தந்திட
மறுத்திட்டோர்
மருந்தாக ஒரு சொட்டு
விஷமேதும் தந்திடாரோ...!