காதல் கவிதை

பிரிவு என்பது

ஷிவஷக்தி
19, June 2017
Views 863

நீயும் நானும்
பிரிவது அவ்வளவு
சுலபமா
என் தாயின் கருவறை
அன்பு
உன் இதய அறையில்
நான் பெற்ற அன்பு
தொப்புள் கொடி உறவு
காதல் கொடி உறவு
உன்னிடம் இருந்து
பிரியமுடியாது என்னால்!!
கொன்றுவிடு என்னை
என் கல்லறை காவியம்
உன்னை சுமக்கும்
ஓவியம்!!
மண்ணில் மண்ணோடு
ஆனேன்
உன் உயிரில்
நான் வாழ்வேன்
நீ அழிக்க முடியாது
நம் நினைவுகளை..
நினைவிருந்தால்
என் கல்லறைக்கு
வந்துபோ..
உன் வருகையில்
உயிரோடு இருப்பேன்
நான்.
பயப்படாதே
நான் உன்னை காதலித்தேன்
காதலிக்கிறேன்
காதலிப்பேன்..
கல்லறை காவியம்
முடியாது
உனக்காக என்றும்
வருவேன்..