காதல் கவிதை

தள்ளி போகாதே

18, June 2017
Views 691

தள்ளி போகாதே
என்னில் இருந்து என் உயிரே
நீ பேசிய காதல்
மொழியை ஊமையாக்கி
உன் உள்ளத்தில் இருக்கும்
காதல் கருவை மறைத்து
என் உள்ளத்தை
நோகடித்து தள்ளி போகாதே

நீ எதை வேண்டுமென்றாலும்
கேள் அன்பே பிரிவை மட்டும் தந்து விடாதே
நான் உன்னோடு கொண்ட
காதல் கற்பனையானது அல்ல
என் உயிரானது என்பதை மறந்து விட்டாயா?


நீ பேசி சென்ற காதல் மொழியால்
மகிழ்வடைந்த என் உணர்வுகளும்
எப்படி சோகத்தை உணரும்
எங்கள் காதலுக்கு வந்த சங்கடத்தை எண்ணி
காதலை மௌனமாக்கிவிடாதே