புரட்சி கவிதை

பெண் ஆயுதம் ஏந்தும் நிலை எப்படி?

பிறேம்ஜி
15, June 2017
Views 872

பெண் ஆயுதம் ஏந்தும் நிலை எப்படி ?
அடுப்பு ஊதிய பெண்
சுடுகுழல் சுடத் தலைப்பு பட்டாள்
எதற்கு ?

தலைவனின் சிறந்த வழி நடத்தலில்
வீட்டு குப்பை குட்டிய மகளிர்
எதிரியின் தலையில்
குண்டு போட கற்றுக் கொண்டாள்

கலியுகத்தில் அண்ணன் வழியில்
ஆண் ஆதிக்கம் அடுப்படிக்கு செல்
என்று செருக்குடன் சொன்னது
ஆண் ஆதிக்கம் அடிமைப் படுத்த
அடிமைப் படுத்த நினைக்க நினைக்க
கையில் அண்ணனின் வழியில்
ஆயுதம் எடுத்தாள் அவள்
அண்ணன் வளர்த்த அணையாத
அக்கினி அணையாது அடிமை
இல்லை என்றும் ஆயுதம் எடுத்தாள்

அரசுக்கு எதிராக
உலக வல்லாதிக்கத்து கொட்டம்
வியந்தது கலியுகம் கலியுக
ஈழப் பெண்கள் நேற்று அடிமை
கி ,பி இருபதாம் நூற்ராண்டில்
அதாவது கலியுகத்தில்

காவல் பூரியும் கரிகாலனின்
காலத்தில் வாழ்ந்த காவல்க்
குகையில் கை குண்டு தாங்கி
கையில் துப்பாக்கி ஏந்தி தாயகக்
கனவுடன் நின்ற வீரியம்
மறக்கப்படும் ஆனால்
தீராத தாக்கங் கொண்ட
தமிழில் ஈழத்தில் ஒரு இனத்தின்
அடக்கு முறைமை அடங்கும் வரை
ஆயுதம் எந்த அடங்காத மகளீர்
அணியின் தலைமை மிகச் சிறந்தது
தமிழ் ஈழ மகளீர் அணிகள்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
அணிகள் அணையாது அண்ணனின்
பாதையில் அணி வகுக்கும்
புலிகளின் தாகம் தமிழ் என்று
தமிழ் ஈழத்து தாகம் தமிழீழ மக்களுடையது
பல தாக்கம் தாங்கி தலை நிமிர்வோம்
தமிழ் தளராத தாகத்து மக்கள்