காதல் கவிதை

!!! உணர்ந்து கொள் என் உத்தமியே !!!

சிந்து.எஸ்
14, December 2011
Views 103618

உணர்வை ஊக்குவிக்க அருகில்
உண்மை நட்பிருக்க
உள்ளம் மகிழ்விக்க
உத்தமி நீயில்லையேன்றால்
உதறிவிடுவேன் என்று எண்ணினாயா 
உன் நினைவை உதிரம் உறையும் வரை
உதறி விட மாட்டேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே

உயிர் நீயென்றானபின் உனை மறக்கும்
உள்ளம் எனக்கில்லை உனையே என்றும்
உண்மையாய் நேசிக்க உன்னிடத்தில்
உரிமை கேட்கிறேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே

உன் உறவுகளை நீ வெறுக்க
உண்மைகளை நான் தேடவில்லை
உயிராய் நான் நேசிக்கும் உன்
உறைந்த உண்மைகளை உணர்த்தவே உன்
உணர்வை கேட்கிறான்
உணர்ந்து கொள் என் உத்தமியே

உருகியே கரணம் கேட்கிறாய்
உதறிவிட உண்மை காதலை
உதறிவிட நீ நினைப்பது உன்
உணர்வையா இல்லை எனையா
உண்மை எதோ நானறியேன்
உணர்ந்து கொள் என் உத்தமியே

உயிராய் நேசித்த காதலை உதறிவிட உன்
உள்ளம் சொல்லுமேயானால் உடனே செய்துவிடு
உன் மகிழ்வே இவனின் விருப்பம்
உணர்ந்து கொள் என் உத்தமியே

உளறியே தினம் தீர்க்கிறாய் காரணம் வேண்டி என்பதை
உணர்ந்து விட்டேன் நானும்
உடலோடு உயிர் உள்ளவரை நான்
உதறிவிடமாட்டேன் நம் உண்மை காதலை
உணர்ந்து கொள் என் உத்தமியே ...