காதல் கவிதை

என்ன அழகு

இந்திரன்
01, March 2006
Views 141374

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா

கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா

வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா

குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா - இல்லை

பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு

மெருகூட்டும் அழகெதென்றால் - வெள்ளை

நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும்

அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா

நெஞ்சமே அழகென்பேன் யான்.

சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா - அவள்

பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா

நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா

பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து

தோதாய் வளர்ந்திருக்கும் கார்குழலை வாரிவிட்டு

கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்

என்ன அழகு மின்னும் அழகு

எல்லாமே அழகென்பேன் நான்