ஏனையவை

புகழ்

27, June 2017
Views 753

புகழ் வாழ்க்கையில் ஒரு
நாளில் வந்து சேருவது இல்லையே
வாழ்க்கையில் தோல்விக்கும்
முயற்சிக்கும் இடையில் வரும்
மோதலில் தோல்வி இடமாறி
செல்வதால் வந்து சேருவது
நீயும் முயற்சி ஒன்றை
உண்மையாக எண்ணி உழை
நாளை உனக்கு வந்து சேரும் நிலையான புகழ்
பிறருக்கு உதவி புரிந்து வருவதால்
வந்து சேருவது புகழ் பிறருக்கு
தீங்கு செய்து வாழ்ந்தால் போவதும் புகழ்
புகழ் அடைந்தவர்களின் வாழ்வை
ரசிக்கிறோம் ஆனால் அவர்கள் சிந்திய கண்ணீரை
பார்ப்பதில்லையே
மனிதனின் தாழ்வு மனப்பாங்கு போக்கும் புகழ்
மனதில் சென்றால் மகிழ்வு
கொள்ளும் தலைக்கு சென்றால் விழுந்து விடும்