ஏனையவை

காலமெல்லாம் கவிதை

Inthiran
20, July 2017
Views 510

கோயில் இருக்கும் வரை
அருள் கொடுக்கும் உணர்வு
பாயில் கிடைக்கும் வரை
அமைதி தரும் தூக்கம்

வாயில் இருக்கும் வரை
சுவை கொடுக்கும் உணவு
நாவில் உச்சரித்தால்
இனிமை தரும் நாமம்

பாவில் படிக்கையிலே
பரவசம் பூம் பாவை - பூங்
காவில் ஆடி வரும்
பூ முகர்ந்த தென்றல்

நாளும் நினைக்கையிலே
கனிவு தரும் நினைவு - அது
கையில் சேர்ந்துவிட்டால்
காலமெல்லாம்  கவிதை