ஏனையவை

நினைவில் தங்கிவிட்டது

05, June 2017
Views 755

இப்போது கண்ணீர் வருகின்றது
அப்போதைய வாழ்வை மீட்டுகையில்..
இது நட்பு இதுதான் காதலென
பகுத்தறியாத பள்ளி நண்பனின்
காதல் கடிதத்திற்காக
அரும்பு மீசை துடிக்க
அடி தடியில் இறங்கியது....

அக் காதலையே ஓர் மாதம்
அவன் பொக்கிஷமாய் போற்றியழ
அதைக் கூடி நின்று நாம் தேற்ற....
பின் கவலை மறந்து
அரட்டைப் பேசியது
நினைவில் தங்கிப் போனது...

வேலைக்காக வெளிநாட்டில் ஒருத்தன்
வெட்டியாக வீட்டில் ஒருத்தன்
காலம் மட்டும் கடிகார முள்ளாய் கண் முன்..

நரை தட்ட... எட்ட நிற்கும் கிழம் மிரட்ட
எவையெவை மாறினாலும்
மாறாத நட்புகள் மனதோடு இனிக்கின்றது
நினைவில் தங்கி விட்டது....
அப்போதைய கனவுகள்...
இப்போதைய நினைவுகளாக..