நடப்பு கவிதை

நானாக நானில்லை…!!

16, February 2016
Views 1585

என்னையே நான்
எண்ணிப் பார்த்த தருணங்கள் பல
எனக்கென்று ஓர் பாதையை
தெரிவு செய்தேன்
 
அந்தப் பாதையில் நான் நடந்தபோது
சுமைகளைத் தாங்கும் சுமைதாங்கியானேன்
 
என்னை அறியாமலே
என் இளமையை இழந்து விட்டேன்
 
பார்வைக்கு அழகான பனிக்குவியல்
கரைவது போல்
என் இளமையும் கரைந்தது
 
தேகம் வலுவிழந்த நிலையில்
இதய நோய் கண்ட என்னை நினைத்தால்
கடை விழியில் கண்ணீர் சுரக்கும்
 
ஏனிந்தக் கோலமென்று
என்னை கேட்க யாருமில்லை இங்கு
 
நிம்மதி எனைத் துறக்க
நானாக நானில்லையின்று
 
அம்மாவின் தீராத வியாதி
எனை வருத்த
 
கணவனை இழந்த அக்காவின் மகளோ
இன்று பல்கலைக்கழகத்தில்
 
கொஞ்சமும் கருணையில்லா
கொடுமன விதியினால்
 
நாற்பது வயதிலும்
வாழ்வெனக்கில்லையென்று
வஞ்சனை செய்ததால்
நானாக நானில்லையின்று