நடப்பு கவிதை

பாழடைந்த வீடு..!

19, November 2015
Views 1512

என் அவல நிலையை
சொல்லி அழ
எனக்கு நாவில்லையே
எனக்குள் ஏன் இந்த
மௌனக்கண்ணீர்
 
இறைவா நான் செய்த
பாவம் தான் என்ன
 
வாழையடி வாழையாயாக
எனக்குள் ராஐவாழ்கை
வாழ்ந்தவர்கள் எங்கே
 
சோபை இழந்த நிலையில்
என்னை ஊனமாக்கி
இடிபாட்டுக்குள் என்னை
நிறுத்தி விட்டனரே
 
வாழ்வின் சுவை ருசிக்கும் வரை
எனக்குள் உண்டு
உறங்கி வாழ்ந்தவர்கள்
கண்காணாத இடம் சென்றனரே
 
நான் வேண்டும் சுகம்
பூட்டிக் கிடக்கும்
கதவுக்குள் கிடைப்பதில்
அர்தமில்லையே
 
அரவங்களும் éச்சிகளின்
வாழ்விடமாகவே நான் இப்போது
இருக்கிறேன்
 
இந்த இன்னல் எனக்கு புதிதென்பதால்
இதயம் கரைகிகிறது
 
என்னை பதிதாக உருவாக்கியவர்
மூன்று தலைமுறைக்கு முன்னவர்
 
அவரோடு தொடர்ந்து வாழ்ந்தவர்களை
இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன்
 
மீண்டும் அவர்களோடு
உயிர்க் கருவாய் அவர்களை
எனக்குள் சுமப்பதையே
விரும்பகிறேன்
 
இன் வெளிநாட்டில் வாழ்பவர்கள்
நாளை வாழ்விடம் தேடி வருவார்களேயானால்
நான் மீண்டும் மலர்ச்சி பெறுவேன்