நடப்பு கவிதை

ஆணவம்

05, June 2017
Views 893

நிலையற்ற வாழ்வில்
இறப்பு நிச்சயம் என் தெரிந்தும்
கிடைப்பதற்கு அரிய திறமையையும்
வசதியும் கிடைக்கும் போது
பெருமை கொள்வதால் வந்து சேரும்
ஆணவ கருக்களை அழித்துவிடாமல்
மனதில் கருக்கொண்டால்
அவை உன் மனதின் அமைதியை
நிலை குலைய செய்துவிடும்-மனமே
நீயும் ஆணவம் கொள்ளாதே
நீ கொண்ட ஆணவம் பிற
உயிர்கள் மீது வழிந்து ஓடும் போது
உயிர்கள் மனதில் ஆயிரம் இடி
மின்னல்களை உண்டாக்கி கண்ணிரை
மழையாக பெய்ய வைக்கின்றது மனமே -
அது உன் வாழ்வை கொன்றுவிடும்
நீயும் உன் ஆணவ கருக்களை களைந்து
உயிர்கள் மீது கருணை கொள்வாய் எனின்
உயிர்களும் மகிழ்வு கொண்டு உன் மீது
அன்பு மழை மொழிந்து நிற்கும் மனமே
நீயும் உன் ஆணவ கருவை கலைத்துவிடு
உன் வாழ்வும் மகிழ்வு பெறும்