காதல் கவிதை

சேர்த்து வைத்த மோகம்!

Inthiran
28, July 2017
Views 948

வெள்ளித் திரையிலொரு
பத்தினியைப் பார்த்துத்
துள்ளிக் குதிக்கிறது
முத்தம் வைத்த காற்று!

அள்ளி அணைத்துவிட
ஆசை வந்த போது
கொள்ளி தனை வீசிப்
போகிறது கூற்று!

பள்ளிப் பருவமது
பார்த்துவிட்ட கோலம்
சொல்லித் தீராது
சேர்த்து வைத்த மோகம்!

அல்லிப் பூவிரண்டைப்
பார்த்திருந்த நேரம்
கொல்லப் பார்க்கிறது
கொண்டு வந்த கோரம்!