புரட்சி கவிதை

ஐநா ஆய்வு ஆக்கம்-காவியம்

பிறேம்ஜி
28, July 2017
Views 490

அரச தீவிர வாதம் அறியாமல்
மனிதனைக்கொன்றது
மனித இனத்தை
அவமானப்படுத்தியது ஆய்வு 

 காலங்கடந்து ஒரு நீதி
கடும்புயலாக நின்றோம்
எம் இனத்துக்காக காலங்கடந்த
 நீதி அநீதியை விடக்
கேவலமானது என்பதையும்
 கருத்தில் எடுக்கவும்
என்னினும் எம்மினம் எம்மனம்
பொறுக் கவில்லை அநீதிக்கு
நீதி ஆண்டவன் இருந்தால் வாழ்
எடுத்து அறைவான்
கடும் போக்கு புத்த அரசியல்
இன அழிப்பு அத்தியாயம்
ஐநா வாழ்த்துக்கள்
ஆனால் இடம் கொடுத்து
இன்று நீதி கொடுத்தாய்
இது தொடருமா ?
இது தொடராதா ?
அல்லது புலுடாவா ?  

இல்லை இது தமிழ் மக்களின்
பயப் பீதி  உண்டு அதை
புத்த அரசியல் தீர்வு கொடுக்குமா ?
இல்லையா ?

உலக அரசியலின் அத்தியாயம்
பழங்குடிகளின் அழிவோ ?

அல்லது அழிந்தவருக்கு கண்ணீர்
வாடிப்போ?
ஆய்வு தெரியும் காலம் பதில் சொல்லும்

ஏடுகளோ இவை?
அழிந்த இனத்தை  ஆளும் வர்க்கம்
அடக்கி ஆளுகிறது உலக அரசியலில்
உன்னத கண்துடைப்போ?
தெரிந்து செயற்பட்டு தமிழ் ஈழத்தை வென்றெடு
வேதனையாய் நாம் என்ன நவீன வேற்றுக்கிரக
வாசிகளா?
அல்லது களவு போன மண்
மீண்டும் வரும் ஆய்வு 
என்ற பகடைக்காய் காட்டும்
 புத்தம் புத்தமும் உலக அரசியலும்
ஆளும் வர்க்கமும் 

நடக்குமா? நாம் ஆளும் நாள் வராதா?