புரட்சி கவிதை

சுயசரிதை

15, July 2017
Views 505

நான் ஈழமெனும் பெயர்கொண்டு
ஒப்பற்ற தலைமையின் கீழ்
பார் வியக்கும் படை கொண்டு
பட்டொளி வீசி நின்றேன்

தியாகத்தின் சிகரம் தொட்டு
ஒழுக்கத்தின் பிறப்பிடமாய்
என்னின மக்களை நான்
அந்நியர் படைநின்று
அரண் போட்டு காத்து நின்றேன்

ஈழமெனும் பெயர் கேட்டு
சிங்களம் மட்டுமன்றி
உலகமே எதிர்த்து நின்ற வேளையிலும்
யாரை நம்பியும் போராடவில்லையென
என் தலைவன் வாயுரைக்க
தனிநாடாய் உருப்பெற்றேன்

உருப்பெற்று வந்த என்னை
காட்டிக்கொடுப்போரும்
நம்பிக்கை துரோகிகளும்
செய்துவிட்ட கொடுமையினால்
தானைதலைவன் இன்றி
தன்மானப்படையுமின்றி
நாளும் பொழுதுமாய்
உருக்குலைந்து கிடக்கின்றேன்
காலம் பதில் சொல்ல.